பார்த்ததும் பூக்கும் நட்பு

பார்த்ததும் பூக்கும் காதல்
சிலவேளை மணம் வீசும்
சிலவேளை வாடிப்பொகும்....
ஆனால்
தகுதி நிறம் மதம் இனம் வயது
கூட பார்ப்பதில்லை..
பார்த்ததும் பூக்கும் நட்பு
என்றென்றும் மணம் வீசும்...
எல்லாவற்றிலும் கரம் கோர்க்கும்...
எப்போதுமே ஒற்றை பூவாய் இருப்பதில்லை
ஒரு பூந்தொட்டத்தையே
உருவாக்கிவிடும்...
ஒரு நண்பன் கூட இல்லாதவன்
வாழ்க்கையை வாழாதவன்...