ஆழ்மனதிலும் இனிக்கும் நட்பு

கையால் தலையை சுற்றி
காதைத் தொடும்
பள்ளி நுழைவுத் தேர்வில்
தொடங்கியது நட்பு .....
அம்மாகிட்ட போனும்
என் கதறி அழுதபோது
ஆறுதல் சொல்லியது .....
வாயில் மிட்டாய் போடும் வேளையில்
சட்டையில் வைத்து கடித்து
எனக்கும் கொஞ்சம் தா எனக் கேட்டது ....
ஆசிரியர் 1 2 3 என எதையோ
சொல்லிக் கொடுக்க
புன்னகை தாளாமல்
கூட்டத்தோடு கூட்டமாய் கத்தியது ....
மதிய உணவு இடைவேளையில்
மற்றவர் உணவை சுவைத்து
நாக்கில் எச்சில் சொட்டியது ...
தனியாக அழுது கொண்டே
பள்ளி சென்றவர்கள்
மாலையில் கூட்டமாய்
வீடு திரும்பியது ...
விடுமுறை நாட்களில்
தட்டான் பிடிக்க முயற்சித்து
சகதியில் உருண்டது ....
பட்டாம் பூச்சியின் வண்ணம் பார்த்து
உள்ளுக்குள் பூரித்தது ...
கூட்டமாய் சென்று
வேப்பங்கோட்டை சேகரித்து
சிறுக சேகரித்தாலும்
நிறைய சேகரித்தாலும்
சமமாய் பங்கிட்டு
உண்டியல் காசு சேர்த்தது ....
பனங்காயில் வண்டி செய்து
வீதியெல்லாம் வலம் வந்தது...
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
காலை மாலை குளித்து மகிழ்ந்தது ...
கூழாங்கல் தேர்வு செய்து
தட்டாங்கல் விளையாடியது ...
மாங்காய் திருட சென்று
பேய்க்கு பயந்து
விழுந்தடித்து ஓடியது..
கொட்டாங்குச்சி வைத்து
தெருவெல்லாம்
மணல் இட்லி சுட்டது ...
களிமண் வைத்து
என்ன உருவென்றே தெரியாத
பாத்திரம் செய்தது ...
முள்ளு இலை பறித்து
ஊதி மணி பார்த்தது ...
பச்சகுதிர தாண்ட முயற்சித்து
வாயில் மண்ணை கவ்வியது...
டயர் உருட்டும் போட்டியில்
முதலிடம் பிடித்தது...
கோலி குண்டு விளையாட்டில்
விரலில் சுளுக்குப் பிடித்தது...
செல்லாங்குச்சியில்
குழியை விட்டு குச்சி
தாண்டாமல் போனது....
புளியங்காய் பறித்து
மற்றவர் பல் கூசும் அளவுக்கு
சுவைத்து மகிழ்ந்தது..
சிந்தனையில் தேன் துளி
எண்ணிப் பார்க்கையில்...