காதல்

மலரோடு விளையாடும்
தென்றல் என்னவளையும்
தொட்டு உறவாட , தென்றலை
நான் கேட்டேன்,'தென்றலே
உனக்கிது நியாயம் தானா
கண்ணிற்கு தெரியாமல்
இப்படி நீ என்னவளைத் தொட்டு
விளையாடுவது'- அதற்கு சொன்னது
தென்றல்,' ஏ , மானிடனே, இத்தனை
தானா உன் அறிவு, தெரிந்துகொள்
நீ வாராது, உன் வரவை ஏங்கி
துவண்டு உறங்கிடப்போன உன்னவளை
'இன்னும் ஏனம்மா உறக்கம் உனக்கு
வசந்தம் வந்துவிட்டது குயில் இசைக்க
உறக்கத்தைவிட்டு உன் மணாளனை
வரவேர்ப்பாய், அதோ அவன்
வந்துவிட்டான் பார் என்று நீ
கேளாமல் உனக்கு தூது சென்றேன்
நான்' .
வெட்கி தலை குனிந்தேன் நான்
தென்றலுக்கு நன்றி சொன்னேன்
மன்னிப்பாயா என்னை என்று
சொல்லி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-May-18, 9:33 am)
Tanglish : kaadhal
பார்வை : 102

மேலே