நாம் தமிழர்

பச்சை
துரோகம்
இழைக்கப்படுகிறது
தமிழர்களின் உரிமை
பறிக்கப்படுகிறது
பரிதாபம்....!!!

சொந்த
மண்ணிலே
அந்நிய சக்திகள்
உள்ளே வர இடம்
கொடுத்தோம்
நாம் வெளியில்
செல்ல வழிவகுத்தோம்....!!

விலை
கொடுத்த
வாக்குகள்
உரிமையை பறித்தது
உன்னை வாழ விடாமல்
துரத்தியது உனது சொந்த
மண்ணிலிருந்து.....!!!

நடிகனுக்கு
நடிக்கத்தான்
தெரியம்
நாட்டை ஆழத்தெரியுமா
புரிந்து நட....!!!

ஒரு இனம்
அழிவதும்
வாழ்வதும்
தலைவர்களை
நாம் பார்த்து
தேர்வு செய்தலே
தீர்மானிக்கிறது...!!!

தமிழா
உன்னிடத்தில்
வரலாறு
இருக்கிறது
நீ யாரை நம்பி
ஏமாறுகிறாய்
யாருக்கு வாக்கு
சேகரிக்கிறாய்.....!!!

தமிழா
ஒன்று படு
உனது இனத்தை
துண்டாட
நினைக்கும்
நாசகார கும்பலை
வென்றுவிடு
நாம் தமிழர்
என்று சொல்லிவிடு....!!!

எழுதியவர் : லத்தீப் (30-May-18, 2:09 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : naam thamizhar
பார்வை : 265

மேலே