அழகு

அழகிற்கு இலக்கணமுண்டு
'அங்க லட்சணங்கள்'-இதை
அத்தனையும் படித்து,மனதில்
உருவேற்றியவன் நான்,பெண்ணே!
உன்னைக் கண்டதும் என்ன சொல்வேன்-
அழகின் இலக்கணமே பெண்ணாய்
ஆனதோ என்றல்லவா இருந்தது
எனக்கு நீ தந்த காட்சி, நம் காதலின்
முதல் சந்திப்பு , அதில் என்னைக் கவர்ந்த
இரண்டம்சங்கள், உந்தன் நாணமும்
உந்தன் உடை அலங்காரத்தில் தெரிந்த
அடக்கம் என் ஆன் ஆணவத்தையும்
வெற்றிகொண்ட அதன் சக்தி, சக்தி .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-May-18, 3:59 pm)
Tanglish : alagu
பார்வை : 121

மேலே