காதல்

போதும் போதும் எப்போதும் உந்தன்
கயல் விழிப்பார்வை ஒன்றே
அது போதும் எப்போதும் அதை
என்மீது நீ செலுத்தும்போது
என் மீது மட்டுமே செலுத்திடும் போது
போதும் போதும் எப்போதும் உந்தன்
மத்தாப்பு சிரிப்பு ஒன்றே அது
மயக்குதடி என் மனதை
மகுடிக்கு மயங்கும் நாகம் போல்
போதும் போதும் எப்போதும்
உந்தன் குயிலினும் இனிய
தமிழ்மொழி பேச்சு அது தரும்
சுவையில் நம் காதல் தேனில்
தோய்த்த பலாச்சுளையாகுதடி
போதும் போதும் எப்போதும் நீ
எனக்குமட்டும் அளிக்கும்
முத்தங்கள் அவை பதிக்குதடி
என் நெஞ்சில் முத்துக்கள்
போதும் போதும் போதுமடி
உன்னை நான் கனவிலும்
மறந்திட மாட்டேன் என்று
நீ சொன்ன வாக்கின் அழகே
அது நம்மை வாழவைக்கும்
உன்னையும் நம் வாழ்வையும்
உண்மைக்கு காதலுக்கோர்
எடுத்துக்காட்டாய்...............
போதும் போதும் எப்போதும்
நீயும் நானும் ஒருவரை ஒருவர்
முழுவதும் அறிந்துகொண்டு
வாழ்ந்தால் .......இன்னும் என்ன
வேண்டும் எனக்கு போதும்
போதுமடி இவையே எப்போதும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (30-May-18, 2:07 pm)
Tanglish : kaadhal
பார்வை : 363

மேலே