காதல் வினா

அவன்
தூரத்தில் வருகையில்
என் மனம் என்னவோ
துள்ளல் போடுகிறது
இது தான் காதலா???
உன்னை
கடந்து செல்கையில்
உன் நிழல் தொட்டு செல்ல
என் மனம் துடிக்கிறது
இது தான் காதல் துடிப்பா??
உன்னை
காணாத பொழுதுகளில்
உன்னே பார்க்க துடிக்கும்
என் இதயம் உன்னே பார்க்கும் வேளையில்
தலை குனிந்து நடக்க செய்வது என்னவோ ??
இது தான் காதல் வெக்கமா ??
அவன்
என்னை கடந்து செல்கையில்
என் கால் என்னவோ
அவன் பின் தொடர எண்ணுகிறது
இது தான் காதல் பயணமா ??
அவன்
பெண்களிடம் பேசும் போது
என் மனம் மட்டும் கவலை கொள்கிறது ...
இது தான் காதல் பொறாமையா??
அவனிடம்
பேச நினைப்பது என் நாட்குறிப்பில்
கவிதையாய் இடம் பெறுகிறது
இது தான் காதல் கவிதையா???
என்
வினாவின் விடையானவனை
உன் விடை எண்ணி காத்து இருக்கிறேன் ....
என்
வினாவிற்கு
விடை பெறுகிறேன் என்னும் விடையை
தரமாட்டாய் என்ற நம்பிக்கையில் ...
அவன் - என்னவன்