வலியின் ஆழம் அறிவாயோ

விஷமே உன்னை இனி ஒரு நாளும் நாடேன்,
ஆன்மாவென்ற ஆகாயத்திலே குறிப்பிடாத எல்லைக்குள் குணங்கள் நலமெல்லாம் பெற்று பெருகிட தாய் பூமி போல் அன்பு கொண்டேன் என்றிட அன்பானவன் என்னை சோதிக்க பூமி போல் காய வைத்தான்.
அணையாத வெப்பம் தணிக்க முடியாத அளவிற்கு புவியினுள் பிழம்பாய் விளங்குவதைப் போல என்னுள்ளே வெப்பம் உண்டாய் எது குடித்தாலும் தனியாது உடலென்ற பூமியில் நரம்பென்ற நதிகள் அங்காங்கே நீரென இரத்தம் சுண்ட வலிகள் எடுத்துடுமே.

அவ்வலியின் ஆழம் சிறிதெனும் அறிவாயோ?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-May-18, 7:07 pm)
பார்வை : 968

மேலே