புதிர்

என் எண்ணங்களின்
பிரதிபலிப்பு
நீ

சமயங்களில்
என் கணிப்பு தோற்றுப்போகும்
சூட்சுமம் அறியேன்

முழுதாய் புரிந்து வைத்திருக்கிறேன்
என்கிற
என் மெத்தனத்தை
ஒரு நொடியில்
உடைக்க
உன்னால் மட்டுமே முடியும்

எழுதியவர் : மனோதினி ஜெ (31-May-18, 10:25 am)
சேர்த்தது : மனோதினி ஜெ
Tanglish : puthir
பார்வை : 123

மேலே