சிவப்பு நிற பூக்கள்!!!

இப்போது நான் போகும்
இத்தார்சாலையோரத்தில்
மித உயரத்தில்
வளர்ந்து நிற்க்கும் பெயர்தெரியாத இந்த
மரங்களின் கிளைகளில்
மலர்ந்திருக்கும்
சிவப்பு நிற பூக்கள் யாவும்
என் காதலனை நினைவுபடுத்துகின்றன!!

அந்தி வானை அழகாய் பிரதிபலிக்கும் அவற்றின் சிவப்பு அவனின் சிவந்த இதயத்தை நினைவுபடுத்துகிறது!

அவற்றின் சோலையில் வீசுவது போன்ற வாசம் அவனின் மணங்கமழும் சுவாசத்தை நினைவுபடுத்துகிறது!

அவற்றின் வேறு பூவோடு சேர துடிக்கும் மஞ்சள் நிற மகரந்தம் அவன் மனதின் ஆசையை நினைவுபடுத்துகிறது!

இப்பூக்களை சுற்றும் தேனீக்கள் என்னை பிரதிபலிககி்றது என் மூளை அவனையே சுற்றிக்கொண்டிருப்பதால்!

இதோ இப்போது என் மேல் உதிருகின்ற இந்த பூக்கள் அவன் காதலின் பிரிவை நினைவுபடுத்துகிறது!

இந்த உதிர்ந்த சிவப்பு நிற பூக்களை இப்போதே காற்று வாரிச் செல்கிறது!

இப்போது மட்டுமன்றி எப்போதும் என் மனதின் கிளை தன்னில் பூத்திருக்கும் காதல் மலர்கள் மட்டும் உதிர்வதேயில்லை..என் உயிரில் அதன் வாசம் என்னவன் என்னுடனற்ற போதும் குறைவதேயில்லை !
காதல்!!!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (31-May-18, 10:44 am)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 276

சிறந்த கவிதைகள்

மேலே