உன் நினைவுகள்
நினைவுகள்
ஞாபகமாக மாறி விட
நினைவில் உள்ள உன் முகம்
ஞாபகமாக மாறவில்லையே...
கண்ணாடி முன்
நான் நின்றால்
தெரிவது என்னவோ
உன் முகம் அல்லவா..
என் நினைவில்
நின்றவனே இன்று
என்னை தனியாக
விட்டுவிட்டு சென்று விட்டாயே ..
எங்கே நான்
தொலைப்பேன்
உன் ஞாபகங்களை ....
தொலைவில் நீ
சென்றாலும் உன்னையே
பின் தொடர நினைப்பது
என் நினைவுகள் இல்லையாட
அது உன் நினைவுகள் ...
காட்சிபொருளாக வைப்பேனோ
உன் நினைவுகளே
என் இதயத்தில்
இல்லை வெற்று காகிதமாக
தூக்கி எறிவேனோ ...
விடை தெரியாமல்
விடை பெறுகிறேன்
என் வினாவின் விடையானவனே
விடையொடு வருவாய் என
வழியோடு விழி வைத்து
காத்து இருக்கிறேன் ....