காதல் தாகம்
என் விருப்பத்தில்
நீ வெறுப்பு கண்டால்
உன் விருப்பத்தில்
நான் விருப்பம் கொள்கிறேன்
இனி இவ்வுலகில் எனக்கு
யாருமே இல்லையே
உன்னைத் தவிர ,
நீ எட்ட நின்றால் அது
எனக்கு சோகம்
கிட்டவருவதில் தான்
உள்ளது என் மோகம்
நீ கோடையில் பெய்யும்
என் மழை மேகம்
என்றும் தீராது உன்னோடு
நான் கொண்ட
காதல் தாகம்
உன்னைக் காணாத போது
ஏக்கத்தில் தவிக்கும்
என் கவிதை வரிகள்
உன்னைக் கண்டவுடன்
மான் குட்டியாய்
துள்ளிக் குதிக்கின்றன
மனத்தில் ஆர்த்தெழும்
மகிழ்வினால் !
அஷ்றப் அலி