நான் யார் உனக்கு தெரிகிறதா

எதிரே
நிற்பது
யார் உனக்கு
தெரிகிறதா......!!!

சுட்டரிக்கும்
வெயில்
திரளாக நிற்கிறோம்...!!!

எங்களின்
கோரிக்கை
உங்களுக்கு
வாடிக்கை வேடிக்கை...!!!

போராட்டம்
நூறு நாட்கள்
கடந்தது-முடிவிலே
நீங்கள் பேச்சுவார்த்தை
நடத்தியது
துப்பாக்கியால்.........!!!

சூடுபட்டு
விழுந்த
போராளிகள்
போராட்டத்தின்
விதைகளடா
மார்த்தட்டுவோம்
நாங்கள் தமிழர்களடா....!!!

ஏவப்பட்ட
தோட்டாக்கள்
சுட்டு துளைத்தது
அப்பாவிகளை
தெரியுமா உனக்கு...!!!

திட்டமிடும்
நரியே நீ
தமிழனை ஏளனமாக
நினைக்காதே....!!!

உனது
வெறிச்செயல்
யார் ஏவிய
தோட்டாக்கள்
ஒருநாள்
பதில் சொல்வாய்...!!!

திசை திருப்ப
முயற்சி
போராட்டம்
போர்களமானது
உயிரையும்
பலிகொண்டது...!!!

வீறுகொண்டு
எழுவோம்
அடக்கும்
கரத்தை
வீழ்த்துவோம்
வென்றிடுவோம்
உறுதியாக...!!!

எழுதியவர் : (3-Jun-18, 4:37 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 100

மேலே