மனதை பாதிக்கும் இல்ல உரையாடல்கள் - சி எம் ஜேசு

நவீனங்கள் நிறைந்த உலகிது - வாழ்வியலில்
நவரசங்களையும் காட்ட நினைக்குது

எனக்கோ தெரிந்தது ஒரு ரசம்
அதைத்தான் பிரதிபலிக்கிறேன் அது அன்பிய சுவாசம்

கூடி நால்வராக குடும்ப கதை பேச
கூடிய நால்வர் மனதும் வெவ்வேறானதையே காட்டியது

அவரவர் எதிர்ப்பார்க்கும்
அன்பு அங்கே கிடைக்காமல் அவரவர் கையும்
நவீன கைபேசிகளுடன் கலந்துரையாடியது

நால்வர் எதிர்பார்த்த நல்லது கைக்கூட அது
நால்வருக்குமானது அல்ல என்பது அதிர்வானது

நால்வரில் இருவருக்கு நிம்மதி
ஒருவர்க்கு அரை நிம்மதி எனக்கோ இது எதிர்பாராதது

தயக்கங்களுடன் கலைந்தோம் எல்லாமே
தற்செயலானவைகளே தீர்வு இருவருக்கு மட்டும் என்பதால்

குடும்ப உறவுகள் கூடும் வேளைகளில்
குழு அன்பியல் வாழ்வை குணப்படுத்தும்

குடும்ப உறவுகள் கூடும் வேளைகளில்
சுயநலன் மிகுந்திடின் அது பென்சில் விரிசல் என்றாலும்
எதிர்பாராமல் உறவுகளின் விரிசலை பெரிதாக்கும்

தொடர்ந்தெழுந்த துயர்களால் துவண்டது என் மனம்
பல சூழல்களில் உழைப்பாகிறேன் உறவுகளுக்கு

பல காலங்களாய் கோபங்கள் மறந்து
குணமாகிறேன் அநேக இல்லங்களுக்கு

இதயம் வலுவிழக்க செய்யும் நேரங்களில்
உதயம் காண்போம் நாளையாவது என்றெண்ணி இயங்குகிறேன்

பிரச்சனைகளை குன்றாக்கி வைத்துள்ளேன் அது
மணல் குன்றாகி சமன் செய்யப்பட வேண்டிய தருணம் வரும்
சுழல்கிறேன் காலதாமதமின்றி கருத்தாய் சீர் செய்திட

பொருட்கள் கெட்டுப்போவதில்லை என்பதுபோல
உயிர் பெறுகிறேன் என் உள்ளம் கலங்காமல் இயங்கிட

எழுதியவர் : சி .எம் .ஜேசு பிரகாஷ் (3-Jun-18, 9:34 pm)
சேர்த்தது : cmjesuprakash
பார்வை : 46

மேலே