மு கருணாநிதியல்ல நீ முடிவில்லா கருணாநிதி நீ

இன்னும் ஒரு நூறாண்டு வாழ மாட்டாயா நீ!
இன்னும் எங்கள் தமிழ் தழைத்திட செய்ய மாட்டாயா நீ!
யார் செய்திடுவார் சமூக நீதி விந்தை
யார் செய்திடுவார் உன்னையன்றில்!
இங்கு யார் செய்திடுவார் எல்லோரும் அர்ச்சகராக
இங்கு யார் செய்திடுவார் உன்னையன்றில்.
துவக்கி வைத்தவன் நீ!
தீராத தமிழ்ப் பசியை
தீர்ந்து போகா தமிழ் உணர்வை
துவக்கி வைத்தவன் நீ!
போராட பெருங்கிழவன் பெரியாரிடம் பயின்ற நீ!
பேசாட பேரறிஞருடன் பெரு பெற்ற நீ!
நாவாட நாவலருடன் நடைபோட்ட நீ!
பொறுமைக்கு பேராசிரியருடன் பாடம் தந்த நீ!
தமிழனை தங்கத்தில் புடம் போட்ட நீ!
மு கருணாநிதி அல்ல நீ!
முடிவில்லா கருணாநிதி நீ!
நீ இருப்பாய் முடிவில்லா தமிழாய்.
தீராத தமிழால் சீறு பெற்ற நீ!
தீராத தமிழுக்கு சீறு சேர்த்த நீ!
நீ சூட்டிடாய் தமிழுக்கு செம்மொழி முடி
நீ உரைத்திட்டாய் கூட்டாட்சி தத்துவத்தை
நீ உலுக்கிட்டாய் 'அவசரகால' அலங்கோலத்தை.
நீ வளர்த்திட்டாய் தமிழகத்தை உயர்தனி நாடாய்
நீ இருந்தும் இல்லாமலும்
நீ (பதவியில்) இருந்தும் இல்லாமலும்
நீ வளர்த்திட்டாய் தமிழகத்தை உயர்தனி நாடாய்.
நீ இப்போதும் எப்போதும் நீ வாழவேண்டும்
நீ இருந்து இன்னும் ஒரு நூறாண்டு வாழவேண்டும்.
நீ இல்லாமல் முடிவில்லா கருணாநிதியாக வாழ்வாய்.
நீ இல்லாமல் வாழ்வாய் என எமக்கு தெரியும்.
நீ இருந்தே எங்களுடன் இருந்தே
நீ இன்னுமொரு நுறாண்டு வாழவேண்டும்.
மு கருணாநிதியல்ல நீ
முடிவில்லா கருணாநிதி நீ