பெண்களை ஏன் மோசமாக சித்தரிக்கப்படுகிறார்கள்

நம் பெண்களை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் தொலைக்காட்சி நாடகங்கள் நம் பெண்களை எவ்வளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ அவ்வளவு மோசமாக சித்தரிக்கின்றன .ஆனால் இதற்கு எந்த ஒரு கண்டனத்தையும் ,எதிர்ப்பையும் காட்டியதில்லை .அது ஏன் என்று தெரியவில்லை .எத்தனையோ மகளிர் அமைப்புகள் இருக்கின்றன .அவை இதை கண்டும் காணாமலும் இருக்கின்றன .நாமும் அதை ரசித்து பார்த்து அதற்கு விருதுகளும் கொடுக்கின்றோம் .எப்போது நாம் மாற போகிறோம் .பெண்கள் என்பவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் ,அவர்களிடம் எவ்வளவு திறமைகள் இருக்கின்றன என்பதை எந்த ஒரு சேனலும் ஒளி பரப்புவது இல்லை .எத்தனை பெண்கள் சாதித்து காட்டி கொண்டு இருக்கிறார்கள் !!!அவர்களை ,அவர்கள் அந்த சாதனைக்காக பட்ட துன்பங்கள் என்று பல விஷயங்கள் இருக்கின்றன .அவைகளை பார்த்தால் பெண்களுக்கு இன்னும் நம்பிக்கை வரும் ,வாழ்க்கையில் சாதிக்க தோன்றும் .அதை நாம் வலியுறுத்த ஒரு போராட்டம் நடத்தத்தான் வேண்டும் .மீண்டும் ஒரு போராட்டம் தொடங்கட்டும் அது ஒரு புது யுகமாக இருக்கட்டும் .

எழுதியவர் : உமாபாபுஜி (5-Jun-18, 8:12 pm)
சேர்த்தது : umababuji
பார்வை : 324

மேலே