382 பகைவர் சொல் ஆய்வால் பயன் பெரிது உண்டாம் - புகழும் இகழும் மதியாமை 7

கலி விருத்தம்

தன்னைத் தன்குணத் தன்மையைத் தேரவே
உன்னு கின்றவன் ஓங்கிய நட்பினோர்
நன்ன யச்சொல்நம் பாமல்நள் ளார்தினம்
பன்னு மாற்றங்கள் நம்பிற் பயனரோ. 7

- புகழும் இகழும் மதியாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தன்னையும் தன்னுடைய பண்புகளையும் அறிந்து கொள்ள நினைக்கின்றவன் தனக்கு வேண்டிய நண்பர்கள் சொல்லும் இன்சொற்களை முற்றும் அப்படியே நம்பாமல், தன் பகைவர்கள் தினமும் சொல்லும் வேறுபட்ட கருத்துகளை நம்பி, அவற்றை ஆராய்ந்து தன்னிடமுள்ள குற்றங்களை அகற்றிவிடுவதனால் பெரிதும் பயனுண்டாம்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

நள்ளார் - பகைவர். மாற்றம் - சொல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-18, 5:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே