இது சங்ககாலம்

புறம் சென்று போர் முடித்து
புரவியிலிருந்து குதித்திறங்கி
நெய்தல் கரையோரத்தில்
கண்ணில் வழியும் நீருடன்
காத்து நின்ற காதலியை
கட்டியணைத்து முத்தமிட்டான் !
விழி எழிலியின் அணைப்பினில்
விழுப்புண்ணின் வேதனை மறந்தான்
அகம் கொண்டான் அரவணைப்பில்
அவளும் அகம் மகிழ்ந்து தன்னை மறந்தாள்
ஆழிப்பேரலையும் சற்று நின்று வாழ்த்திச் சென்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jun-18, 6:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 185

மேலே