முதல் முத்தம்

குளுமையான இரவு
வெண்மையான நிலவு
சூடான மூசிக் காற்று
என் தேகம் முழுதும் வீசியது
கண் விழித்து பார்த்தால்

என் முன் சிறு இடைவெளியில் அவள்
அவள் முன் சிறு இடைவெளியில் நான்
இருவரும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர்.

இருவரின் உதடுகளும்
ஏதோ பேச துடிக்கிறது
ஆனால்,,,,,
மனதோ வார்த்தைகளை கட்டி போட்டு
பேச வருவதை தடுக்கிறது.

மீனைப் போல
கண் விளித்திக்கொண்டே
கனவில் மிதக்கிறேன்
ஆனால்......
இது கனவல்ல நிஜமென்று
என் மனதிற்கு தெரிகிறது.

இருவரின் மனது மட்டும் பேசுகிறது
சத்தமில்லா யுத்தம் நடக்கிறது
சுற்றி இருந்தவை எல்லாம் ஸ்தம்பித்தது
இறுதில் அந்த சாந்தம் முத்தமானது .

"முதல் முத்தம்"
அவளுக்கும் எனக்கும் நடந்த யுத்தம்
இருவரின் மனதுக்கு மட்டும்
கேட்டது அந்த சத்தம்
அதுதான் காதலின் சித்தம்.

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (9-Jun-18, 6:29 pm)
பார்வை : 270

மேலே