நம் சந்திப்பு
நாம் இருவரும் சந்தித்த வேளையில்
சந்திரன் வந்து ஆசிர்வதித்தது
மறவாது என்றும் என் மனதில்.
நட்சத்திரம் எல்லாம் நடுவானில்
நின்று கொண்டு அர்ச்சதை போட்டது
அங்கும் இங்குமாய்
அலைந்த மேகக்கூட்டங்கள்
ஒன்று சேர்ந்து வாழ்த்துக்கள் சொன்னது...............