காதலிக்கிறோம்
சிவந்த மாலை வான மேகம் வீசிய காற்றில்
என்னவள் மெதுவாக நடந்து வருகிறாள் பேருந்து நிழற்க் குடை நோக்கி
கால் கடக்க காத்திருந்து அவள் விழிகள் என்னை உற்றுநோக்கி பார்த்து பேச தொடங்கியது
நீ தினமும் எனக்காக இப்படி காத்திருப்பதன் காரணம்
மலரின் அழிய அழகின் விழி தினம் நான் நோக்கி வாழ்ந்திடவே
உன் இதயத்தில் அன்பு கணவனாக குடிவர காத்திருக்கிறேன்
எனது நெஞ்சில் இடமில்லாவிடில் எஞ்சியக் காலம் நீ என்ன செய்வாயோ
வஞ்சி தரமறுத்த இதயத்தை என் நெஞ்சில் நினைவாக சுமத்துக் கொண்டு இறந்திடுவேன்
என் மதில் நினைத்திருக்கும் மதிக் கெட்ட என்னவனே
உன் மனைவியாகத்தான் என் விழிகள் சில நிமிடம் உரிமையோடு விளையாடியது
நான் துயில் கொண்டு சாய்ந்திடவே கணவா உன் தோல் சீக்கிரம் தா .
படைப்பு
ரவி.சு