காதல்
அவள் ...............அன்று தன்னை
இன்பத்தின் எல்லைக்கோட்டில்
இருப்பதை உணர்ந்தாள்,அப்படியே
இன்ப அதிர்ச்சியில் இருந்தவளைக்காண
அவள் தோழி அங்கு வந்தாள்--ஏனடி
அன்பு தோழியே இப்படி உன்னை மறந்து
ஏதோ கனவுலகில் நீ..........என்று கூற
சுயநினைவில் வந்த அவள் கூறினால்
'அடியே என் அன்பு தோழி, நீ அறியாய்
அவன், என்னவன் என்று நான் உன்னிடம்
கூறிவந்தேனே, அவன் என்னை அள்ளி அணைத்து
முத்தமிட்டு,'கண்ணே நீ எந்தன் இதயக் கனி, நீதான்
நீயேதான் நீ மட்டுமே என் இதயக் கனி' என்றானடி
என்றாள்......................அவளிடமிருந்து பதில் ஏதும்
வராதுபோக, என்னடி தோழி நீ ஒன்னும் கூறலையே
என, அவள் சன்ன குரலில் ....'எனக்கோர் பயம்
சற்றுமுன்தான் என்னவென்று உன்னிடம் நேற்று
கூறினேனே அந்த அவனும் இதையே நீ சொன்ன
அதே 'நீ தான் இதயக் கனி, நீயே நீதான் 'என்றானடி ..
எனக்கு மயக்கமே வருகிறதடி என்றாள் ........ஏன் என்றேன்
அவனும் என்னை கட்டி அனைத்து முத்தங்கள் தந்தானடி
நான் ........நான்..... ஏமாந்தேனோ....... நா தழு தழுக்க.....
அவள்.......................
நாம் இருவரில் , யார் ஏமார்ந்தோம்.......யாரடி .........
இருவருமே............... அம்மம்மா ........போதும் போதும்
இந்த காதலடி என்றாள்............
இருவரும் வெளியே வர அங்கு பஸ் ஸ்டாண்டில் ஒரு
போஸ்டர் அங்கு சங்கு தியேட்டரில் ' ஏமாறாதே
ஏமாறாதே ....ஏமாற்றாதே, ஏமாற்றாதே ..' திரைப்படம்
மூன்று நாள் மட்டுமே ............. கண்ணில் காணப்பட்டது...