வாடாதே
தேன் எடுக்க
வண்டு
வருவதற்கு முன்
மலரே நீ
வாடிய மாயம்
என்ன.......
வண்டினை
பிடிகாமலா ?
இல்லை
தேனை
யாருக்கும்
விட்டுக் கொடுக்க
மனதில்லாமலா ?
கண்ணம்மா
உன்னையே
நினைத்திருந்தேன்
நான் எந்நாளும்
நீ என்னை
விட்டு
போக
காரணம்
என்னம்மா
சொல்லம்மா.....
உன் மனதில்
நான்
இருப்பது
பாரமாக
இருந்தால்
சொல்லிவிடு
உன்னுடன் சேர்த்து
என்னையும்
நானே சுமக்கிறேன்
என்
மனதில்......
மங்கையே
நீ என்றும்
வாடாத
மலராகவே
இரு
என்னாலும்
நீ வாட
வேண்டாம்.....
எனக்காகவும்
நீ வாட
வேண்டாம்.........
இரு கரம்
நீட்டி
உன்னை
அழைத்தேன்
என் இதயத்திற்குள்
வசிக்க
ஆனால்..,
நீயோ.........
ஒரு கரம்
நீட்டி
என்னை ஒதுக்கி
விட்டாய் ......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
