என் தேசம்

தேசத்தின் உயிர் நாடியே
தேசியக் கொடியே - நீ
தலை நிமிர்ந்ததால் - நான்
தலை வணங்குகிறேன்.

உன் நலத்திற்காக
தன் நலம் பாராதவர்கள்
மண் நிலம் மீது
மீளாத் துயில் கொண்டார்கள்.

உழைப்பால் உருகும்
உடற் வியர்வையின் தெளிப்பை
உணர்த்தும் நிறம் சிவப்பு என
உன் மேனியில்
உடுத்திக் கொண்டாய்.

சாந்தமும் சமாதானமும்
சரித்திரத்தில் பதியும் என்பதால்
வானின் வெண்மேக
வெள்ளையினை நடுவில்
அணிந்துக் கொண்டாய்.

பசுமையின் வளமையே
பாரத தேசத்தின் நலம் என்பதால்
பச்சை நிறத்தையும்
போர்த்திக் கொண்டாய்.

மூவண்ணமும் - காற்றில்
மூச்சு விடுவதைப் பார்த்ததும்
மனதில் மானசீகம் விதைத்துவிட்டாய்

உன்னைப் போல் - வாழ்வில்
உன்னதம் பெற்றிடவே நானும்
உன் புகழைப் பரப்புவேன்.

எழுதியவர் : சங்கு சுப்ரமணியன். (13-Jun-18, 8:06 pm)
Tanglish : en dhesam
பார்வை : 540

மேலே