ஆதலிலால் நான் கவிஞன்
இருவரும் உடைக்கத்தான்
செய்கிறார்கள்
ஒருவன்
கல்லுடைக்கிறான்
இன்னொருவன்
கல்லில் சிலை செய்கிறான்
நீங்கள்
சிலையில் கலை ரசிக்கிறீர்கள்
நான்
இருவர் உழைப்பிலும் சிந்தும்
வியர்வையை சிந்தித்துப் பார்க்கிறேன்
ஆதலிலால்
நான் கவிஞன் !