நிஜத்தில் உன் நினைவுடனும் இந்த மாலைப் பொழுதுடனும்
கனவு வனத்தில்
உன்னோடு கைகோர்த்து நடந்து சோர்ந்தேன்
கவிதையில்
உனக்காக வார்த்தைகள் கோர்த்து சோர்ந்தேன்
வானத்தில்
நிலவுடன் உன் கற்பனையில் மிதந்து சோர்ந்தேன்
நிஜத்தில்
உன் நினைவுடனும் இந்த மாலைப் பொழுதுடனும்
உனக்காக காத்திருப்பேன் ஒரு நாளும் சோர்ந்துவிட மாட்டேன் !