கேட்டு சொல்லடி உன் மனதை

ஒவ்வொரு
இரவிலும்
ஒவ்வொரு கனவு......
ஒவ்வொரு
கனவிலும்
உன்னுடைய
நினைவு......

ஒவ்வொரு
நினைவிலும்
ஒவ்வொரு ரசனை....
ஒவ்வொரு
ரசனையிலும்
பிறக்குது
ஒவ்வொரு கவிதை.....

ஒவ்வொரு
கவிதையும்
சொல்லுது
உன்
பெயரை......
ஒவ்வொரு
பொழுதும்
பொக்கிஷம்
அது உன்னுடன்.....

ஒவ்வொரு
இரவையும்
நான் தான்
கொள்ளை
கொண்டேன்....
ஆனால்,
உன்னை
நான்
கண்ட
அந்த
இரவு மட்டும்
என்னை
கொள்ளை
கொண்டது.......

சொல்
அன்பரசியே
என்
மனதை
களவாடி
சென்றது
இரவா?
இல்லை நீயா?.......
உன்னை
ஒருமுறை
கேட்டு சொல்லடி.......

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (14-Jun-18, 8:32 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 275

மேலே