உன்னையே என்னையாக்கிவிட்டேன்

முதல் முறையாக
உன்னை
பார்க்கிறேன்
முழுவதுமாக
உன்னை
இரசிக்கிறேன்......
முதல்
தடவையாக
என்னையே
நான்
மறக்கிறேன்........
முதலில்
இருந்து
முடிவு வரை
உன்னை
வார்த்தையாலே
வர்ணிக்கிறேன்...........

கிழக்கில்
உதிக்கும்
சூரியனை
மேற்கு
விழுங்குவது போல
நுனி முதல்
அடி வரை
விழுங்குகிறது
உன்
நினைவும்
என்னை..........

சொந்தமென்று
சொல்லிக்கொள்ள
சொந்த
நிழல்
மட்டும் தான்
இதுவரை
என் வாழ்வில்......
நிஜமென
நிலையாக
வந்துவிட்டாய்
இப்பொழுது
நீயும்
என் வாழ்வில்........

திங்களும்
திசையை
திருப்பி
போனது
உன்
திரு
பார்வையை
பார்த்ததும்......

ஞாயிறும்
மேகங்களுக்கு
இடையே
மறைந்து
போனது
வீட்டை விட்டு
நீ வெளியே
வந்ததும்.........

உன்
விலாசம்
எதுவும்
தெரியாது.....
ஆனால்,
உன்னுடன்
சேர்ந்து
வாழவே
துடிக்கிறது
என்
இதயம்.....

நீ
சாய்வதற்கே
காத்துக் கிடக்கிறது
என்
தோளும்..........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (14-Jun-18, 8:23 pm)
பார்வை : 266
மேலே