தடித்தனம்

வெகுளி என்று நினைத்தேன்
சகுனி ஆகிவிட்டாயே!

மனத்தில் எத்தனை குப்பைகள்
வாயில் எப்படி பூத்தூறல்?

உன் ஆசைகள், பேராசைகள்
உன் அன்பு, தந்திரம்.

என்ன தகுதி இருக்கிறது
உன் அகங்காரத்துக்கு?

ஒரு சதிகாரப் பாவி
பொய்கலந்து புனைந்ததை
நம்பிக் கேட்டு
நம்பிக் கெட்டாய்.

குடித்தனம் செய்கிற பெண்ணுக்கு
இத்தனை தடித்தனமா?

நீ அடித்த அடியில்
நீ தான் நொறுங்கினாய்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (15-Jun-18, 2:23 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 78

மேலே