யுவதியின் திருமணம்

வழக்கமான மாலை மல்லிகையும் இன்று
அதிகாலையில் மொட்டு மலர்ந்தது;
இந்த ஆத்மார்த்ம தம்பதியரின்
அழகிய முகூர்த்தம் கண்டு விட...
என் மனையாளனின்
கைகளின் சம்பாஷனை
அது ஒரு...
மழை வந்த தேசத்தின் மண் வாசனை !
இதுவரை...
வளையொலி கொலுசொலி அம்மா வீட்டில்
இனிமேல் எனக்கு
முத்தாய்ப்பாய் மெட்டி ஒலி...
அது என் அத்தான் வீட்டில்...!
மாவிலையில் தோரணம், குலை காய்த்த வாழை மரம்
பூச்சரத்தில் அலங்காரம், எட்டுக்கட்டும் நாதஸ்வரம்
ஆம்...
இது எந்தன் திருமணம்!

எழுதியவர் : ரஞ்சினி மைந்தன் (15-Jun-18, 4:50 pm)
சேர்த்தது : ரஞ்சினி மைந்தன்
பார்வை : 2355

மேலே