தமிழ் ---கலைவாணியோ ராணியோ மெட்டில்

கலைவாணியோ?... ராணியோ?... மெட்டில் :


பல்லவி :

உயிர் மூச்சிலே பேச்சிலே தமிழ் தான் தேனே...
குயில் கூவியே பாடுதே புகழ் தான் வானே... (உயிர்...)

நதி ஓடிவரும் சந்தம் கோடிதரும்
கவி பாடிவந்தால் இன்பம் தேடிவரும்

உயிர்...


சரணம் 1 :

கோதைமொழி மார்கழியில் நாளுமிங்கே கேட்கும்
பேதைவிழி மாதவனைக் காணும் கற்பனை பூக்கும்
சீதைமுகம் தோன்றிடுமே கம்பன் சொல்லினில் மீண்டும்
பாதைமலரும் பூக்களை எழில் குறிஞ்சி சொல்லுது யாண்டும்

பூங்கொடிக்கே தேரை தரும் வள்ளளுண்டு
தாய்ப்பசுவோ?... நீதி பெறும் வந்துநின்று

கல்நெஞ்சம் மாற்றும் நீரை
செந்தமிழ் மேகம் ஊற்றும் பாரில்...
அன்பே வேதமாகும்
பைந்தமிழ் வந்தே செவியில் ஓதும்...

வள்ளுவர் கூறும் நல்லதின் ஆழம் உள்ளமும் வாழ ஏற்கும்...

உயிர்...


சரணம் 2 :

வாகைமலர் சூடும் படை வேந்தன் வெற்றியைப் பாடும்
தோகைமயில் ஏறிவரும் வேலன் உள்ளமும் தேடும்
ஆதிசிவன் உடுக்கையிலே பூமிவந்த தேகம்
ஆதியில அகத்தியரும் எழுதிவைத்த இராகம்

பூங்குழலில் தவழும் இசை போல் வருமே...
தீங்கனியின் சுவையை பாடும் நூல் தருமே...

சங்கம் வளர்க்க நாளும் பிறந்து
இதயம் படிக்க இனிமை விருந்து
இலக்கியமும் வனப்பு
ழகரம் தமிழ்மொழியின் சிறப்பு

பொன்மலர் வீசும் தென்றலைப் போல நெஞ்சினில் மோதி மயக்கும்...

உயிர்...

எழுதியவர் : இதயம் விஜய் (15-Jun-18, 6:00 pm)
பார்வை : 328

மேலே