சுனாமியில் நடந்த உண்மை சம்பவம் தழுவிய கவிதை
' சுனாமி' ஓய்ந்து ஐந்தாம் நாள்.....
கடற்கரை ஓரம் நடந்துவந்தேன்
அங்கோர் கருப்பு நிற நாய்
கடற்கரையில் அலைகள் மோதி
மணலை அணைக்குமிடத்தில்
ஓர் இடத்தில் சுற்றி சுற்றிவந்து
பின் நின்று குறைத்தது ,சிறிது
அழுகை தெரிந்தது அந்த குறைப்பில்
குறைப்பி இப்போது நின்றது; நாயோ
இப்போது முட்டி இட்டு குந்தியது,
நெருங்கிநின்று பார்த்தேன்,
அதன் கண்களில் நீர் வழிந்து வந்தது
சிறிது நேரம் அப்படியே இருந்துவிட்டு
இப்போது அந்த கருப்பு நாய்
தன்னிடம் பொய் சேர்ந்தது........
மீண்டும் சில நாட்கள் தொடர்ந்து நான்
அதே இடத்தில் காலையில் நடந்துவர
இதே காட்சி...................
இப்போது நான் அருகில் உள்ள
மீனவர் குப்பத்து ஜனங்களை விஜாரிக்க
தெரிந்தது அந்த கருப்பு நாய் மீனவன் ஜானின் நாய்
அன்று அவன் தன சகாக்களுடன் மீன் பிடிக்க
கடலுக்கு சென்றவன், திரும்பவே இல்லை வீடு
அன்றுதான் கடல் கொந்தளித்தது 'சுனாமியால்'
அவன் வரவிற்கு காத்திருந்த நாய் ஏமார்ந்தது
அன்றிலிருந்து தினமும் கடற்கைக்கு வந்து
காத்திருந்து அவன் வாராதுபோக குறைத்துவிட்டு
கண்ணீரும் விட்டு வீடு திரும்புமாம்.......உணவும்
சரியாக உண்ணாது அவனையே நினைத்து....
இன்று சுனாமி அடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது
நான் கடற்கரையில் அதே இடத்தில் நின்றிருந்தேன்
கருப்பு நாய் காணவில்லை.............குப்பத்தில் விசாரிக்க
அது அதன் எஜமானனை காணாது பத்தாம் நாள்
இறந்துவிட்டது...............எஜமானனுக்கு உயிர்விட்டது.என்றனர்.
அதைப் புதைத்து அவன் நினைவாய் அதன் மேல்
இப்போது வளர்கிறது ஒரு 'சிவப்பு ரோசா செடி'
அதன் நினைவாயும் ......