நீ எங்கே

நேரம் மறந்து என்னோடு பேசின நீ எங்கே?

கற்பனைகளின் உருவமாய் என் முன்னே உதித்த நீ எங்கே?

என் தனிமையின் தாகத்தை தனித்த நீ எங்கே?

உன்னையே உலகமாய் சுற்ற வைத்த நீ எங்கே?

உறவின் ஆழத்தை உணர வைத்த நீ எங்கே?

இதயத்தை உருவக் குத்தின அன்பின் அம்புகளை எய்த நீ எங்கே?

நம்பிக்கையால் வாழ்க்கையை பழக்குவித்த நீ எங்கே?

தேடுகிறேன், காத்திருக்கிறேன் நீ அறிவாய் வருவாய் என...

எழுதியவர் : ஜான் (19-Jun-18, 5:56 am)
Tanglish : nee engae
பார்வை : 226

மேலே