பாரதி வந்தான்
கதவு தட்டும் சத்தம்
யார் இந்த வேளையில் ?
இன்னுமா விழிக்கவில்லை
நான்தானடா
முறுக்கு மீசை புரட்சிக்காரன்
பாரதி வந்திருக்கிறேன்
அக்னி குஞ்சு கொண்டு வந்திருக்கிறேன்
மனப் பொந்திடை வைத்திடவேண்டும்
தத்த தரிகட தத்த தரிகட
திறடா கதவை
கதவு திறந்தது கனவு கலைந்தது
புதிய உதயம் பிறந்தது
---கவின் சாரலன்