ஆலிங்கன மழை

உச்சி வெயில் போன்று
உன் நினைவுகள் கொளுத்திய
என்னிதய ஏக்கங்களை
உஷ்ணச் சுவாலையாய்
உடலெங்கும் கொண்டு
எரிக்கிறதே இந்த
பொல்லாத் தனிமை
நீ எங்கே தான் எனை விட்டுச்
சென்றாயோ என்னவளே!
உன் மயக்கும் விழிகளின்
மந்திரத் தாள்கள் திறந்து அந்த
மழை மேகம் போல்
என்னை உன் இமை
மடல்களால் மூடி விடு
அடை மழையாய்
உடனே வந்து இப்போதே
ஆலிங்கனம் பெய்து விடு
கொதிக்கும் அந்த
ஏகாந்தக் குழம்பு
இதமான காலைப்
பனியாய் உருகி
என்னுடலம் முழுவதும் வந்து
சுகத் தென்றலாய் வீசட்டுமே !
அஷ்றப் அலி