கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

" கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே "

இப்பாடல் குறுந்தொகையில் தலைவியின் கூற்றாக வருகிறது.

பசுவின் காம்பில் பால் சுரக்கிறது . ஆனால் உண்டு பருக வேண்டிய அதன் கன்று இல்லை , பாலை பாத்திரத்தில் பிடித்து கொள்வாரும் இல்லை. எனவே பால், அதன் கன்றும் உண்ணாமல் , பால் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் வீணே கீழே வடிகிறது , இதை போல என் அழகை என் தலைவனும் அனுபவிக்காமல் , எனக்கும் இல்லாமல் பசலை என்னும் நோய் என் அழகை தின்று கொண்டு இருக்கிறது.

தலைவனது பிரிவினால் தலைவியின் உடல் வெளிரிபோகும் நிலையே பசலை நோய் என்று குறிக்கபடுகிறது

ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை ஆழமாய் இந்த பாடலில் பதிவு செய்திருக்கிறார் .

கொஞ்சம் சங்க தமிழையும் செவி மடுப்போம்!!

.
மீனாட்சி

எழுதியவர் : (20-Jun-18, 7:44 pm)
பார்வை : 165

மேலே