மனிதனை தவிர
இறைவனின் படைப்பில்
இயற்கையாக உள்ள
இறைப்பையை நிரப்ப -- இரைத்தேடி
சிறகுகள் விரித்து
வானத்தில் பறந்து திரிந்தேன்...!
அகன்று விரிந்த சிறகுகள்
ஓய்வெடுக்க திரும்ப வந்தபோது
அந்நிய மரத்தின் நிழலை
அடைகளம் கேட்டு
அகதியாய் நின்றேன்...
தாய் நாட்டில்
திசைகளை மறந்து
உறவுகளை பிரிந்து
அகதியாய் என்னை அலையவைக்க
மனிதனை தவிர
வேறு யார் முயற்சி செய்வார்??