அவளின் நினைவுகள்

இறக்க முடியாத
சிலுவைகலாய்
இதயத்தில்
இன்பம் அல்ல
துன்பமாய்
அவளின் நினைவுகள்.....

கடக்க முடியாத
நொடிகளாய்
நெஞ்சில்
நெருடுகிறது
காதல் அல்ல
அவள் தந்த
காயங்கள்........

மறக்க முடியாத
கனவுகளாய்
கண்களில்
கரையுது
கண்ணீர அல்ல
அவளின்
கனிவுகள்......

ஏற்க முடியாத
முடிவுகளாய்
வாழ்க்கை அல்ல
அவளின் வார்த்தைகள்......

எப்படி
அழியும்
என்று
தெரியவில்லை
என்
மனதில்
அவளின் நினைவுகள்.............

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (21-Jun-18, 1:02 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : avalin ninaivukal
பார்வை : 399

மேலே