நட்புக்கீடாக நானிலத்தில் வேறுண்டோ

பாசக் கற்களினால்
பாலமமைத்து நேசமலர்த்
தூண்களினால் நெஞ்சங்களை
இறுக்கமாய் இணைக்கும்,
துன்பத்தால் மாய்கையில்
தலைகோதித் துயர்துடைக்கும்
ஐந்திலும் ஒன்றாகும்
குன்றாமல் குலையாமல்
ஐம்பதிலும் ஒன்றாகும்

தலை கொடுத்துத் தனது
தோழனின் தோழ்காக்கும்
நண்பனின் உயர்வுக்காய்
தன்னலம் மறக்கும்,
உரிமைச் சண்டையிடும்
உணர்ந்ததும் காலில் மண்டியிடும்
உணவைப் பகிர்ந்துண்ணும்
ருசிகண்டால் பறித்தும் உண்ணும்,
தகுதி தகைமைகளை
தம்மில் புதைத்து
ஏற்றத் தாழ்வுகளை
இது எட்டி உதைத்து
நட்பே நலமெனக் கொள்ளும்,
மழுங்காமல் அலுங்காமல்
வாழ்வின் இறுதிவரை
மனங்களில் பண்ணிசைக்கும்
ஒற்றை ஜீவநாதம் அதுவே நட்பு

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (21-Jun-18, 1:11 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 486

மேலே