கன்னம் இட்ட காரிகை

கன்னம் இட்ட காரிகை

என் மார்பின் மீதவள் கன்னம் வைத்தாள்
நெஞ்சைத் திருடக் கன்னம் வைத்தாள்
என்னைக் கட்டி அடை காத்தாள்
என் நினைவொன்றையே அசை போட்டாள்
முகவாய் தூக்கி எடை போட்டாள்
உதடுக்கு உதடு பசை போட்டாள்
என் கன்னத்தால் தன்னது உருத்திக் கொண்டாள்
என்னையே உடையாக உடுத்திக் கொண்டாள்
அவள் கவிதை வயல்-
நானற்ற நினைவுகள் களைகளாக-
களையெடுப்பவன் கவிஞனானேன்...!

எழுதியவர் : திருத்தக்கன் (21-Jun-18, 7:52 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 146

மேலே