மாலைப் பொழுதினிலே

நிலவுக்கு பொழுது போகவில்லையோ
நிலம் தீண்ட வழி தேடி நின்றது
செங்காந்தாலும் காதல் கொண்டது
வண்ண மயில் நீதான் என
வானம் பார்த்து நின்றது ...
பெண்மையே
கருவிழி கூந்தலை ஒதுக்கிவிடும்
அழகிற்கு
வான் நிலவு கூட
சரிசமமாகாது
தோற்றுப் போகக் கூடியது
உன் புன்சிரிப்பில்
பனித்துளியும் மழைத்துளியும்
அலை அலையாய்
ரசிக்கிறேன்
என் திருமகளே
எனை ஆளும்
மணமகளே!
மனம் சூடும் நாட்களுக்காக
நான்
மணமாலையோடு
நீ வருவாயோ !!!!

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (23-Jun-18, 2:07 pm)
சேர்த்தது : Tamilselvi
பார்வை : 180

மேலே