என் தாய்

உள்ளத்து அன்பால் உவகை கொள்பவள்
தொடுதலின்றி மனம் தொடுமுணர்விருக்கு ஏங்குபவள்
மன தைரியத்தாலே ,மாண்டுபோகாது மன்றாடிக்கொண்டிருக்கிறாள் இன்றளவும்

விடாமுயற்சி கொண்டு வாழ்கிறாள்
முன்னேற்றம் காண முனைப்போடே முயல்கிறாள்
வாழ்க்கை ஓட்டத்தில் ஓடுகிறாள்
பாதையின் வளைவு நெளிவுகளுக்கேற்ப
பணிந்து மெலிந்து செல்கிறாள்

அவளுக்கு கண்ணீரில்லை களிப்பில்லை

எழுதியவர் : கயல் அமுது (23-Jun-18, 6:18 pm)
பார்வை : 342

மேலே