© ம. ரமேஷ் சென்ரியு
சுதந்திர தினம்
இரட்டிப்பு மகிழ்ச்சி
சமச்சீர் புத்தகம், சாக்லேட்
விளக்கம் வேண்டுவோர்க்கு மட்டும்.
சமச்சீர் புத்தகம் கொடுத்ததால் மாணவன் மகிழ்கிறான் என்றால் வரவேற்கத் தக்கதுதான். ஆனால் சாக்லேட்டுக்கும் மகிழ்கிறான் என்றால் என்ன அர்த்தம்? இன்னும் கூட 50பைசா கொடுத்து ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுக்க முடியாத குடும்பங்கள் இருக்கத்தான் செய்கிறது என்றால் இந்தியாவின் செல்வச் செழிப்பும் மறுபுறம் மிக ஏழ்மையான கொடுமையையும் காணப்படுகிறதை இந்த சென்ரியு படம் பிடித்துக் காட்டுகிறது. கோடிக்கணக்கில் இலவசங்கள் கொட்டிக்கொடுக்கப்பட்டு திரும்ப எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது வேறு விசயம். 65 ஆண்டுகள் கடந்தும் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் 50பைசா சாக்லேட்தான் தரப்படுகிறது. ஏன் மாணவர்களுக்கு ஒரு ஒரு கிலோ இனிப்பு கொடுத்தால் என்ன இந்தியப் பொருளாதாரம் குறைஞ்சி போயிடுமா?