© ம. ரமேஷ் ஹைக்கூ 18


1. மேகம் பெருமைப்படும்
நிலவைத் தழுவுகிறேன்
தரையிலிருந்து கண்கள்

2. இருவரும்
எங்கோ நெடுந்தொலைவில்
வருடும் நினைவுகள்

விளக்கம் தேவைப்படுபவர்க்கு மட்டும்.
இன்று இரவு இரண்டு மணிக்கு விழிப்புதட்டியதால் எழுந்து வந்து பால்கனியில் அமர்ந்து நிலவைப்பார்த்தேன். ரசித்தேன். இந்த ஹைக்கூ மனத்தில் தோன்றியது.


1.மேகம் பெருமைப்படும்
நிலவைத் தழுவுகிறேன்
தரையிலிருந்து கண்கள்

நான் கீழே தரையில் இருக்கிறேன். எனக்கு மேலே தொலைவில் மேகம் இருக்கிறது. அதற்கும் மேலே மிகத்தொலைவில் நிலவு இருக்கிறது. நிலவைக் கடந்து மேகமோ, மேகத்தைக் கடந்து நிலவோ செல்லும்போது தரையிலிருந்து நான் பார்க்கும்போது அவைகள் இரண்டும் வருடியும் தழுவியும் செல்வதுபோல தோன்றுகிறது. அதனால் மேலே உள்ள ஹைக்கூ தோன்றியது.

எழுதி முடித்துவிட்டு இப்போது கவிஞனாக நிலவைப்பார்க்கும்போது மேகமும் நிலவும் காதலன் காதலி போன்று தெரிகிறார்கள். அதை என் காதலியுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறேன். அவள் எங்கேயோ நான் எங்கேயோ தொலைவில் பிரிந்து இருக்கிறோம். பழைய நினைவுகள் வருடுகிறது. இரண்டாவது ஹைக்கூ இப்படிப் பிறந்தது.

2.இருவரும்
எங்கோ நெடுந்தொலைவில்
வருடும் நினைவுகள்

சரி இப்போது நீங்கள் சொல்லுங்கள் இந்த இரண்டு ஹைக்கூக்களில் எது நன்றாக இருக்கிறது.

எழுதியவர் : ம. ரமேஷ் (15-Aug-11, 7:33 am)
பார்வை : 297

மேலே