நீ எனக்காக காத்திருந்த மாலைப்பொழுதில்
நீ கடந்து சென்ற வாசலில்
தென்றல் குளிர்ந்தது
நீ நடந்து சென்ற வீதியில்
சாரல் தூவியது
நீ வருகை புரிந்த தோட்டத்தில்
மலர்கள் ஆயிரமாய் பூத்தது
நீ எனக்காக காத்திருந்த மாலைப்பொழுதில்
அந்தி வானமும் ஆதவனும் விடை பகரத் தயங்கியது !