அறுசீர் விருத்தம்

அரசியல் உத்தமர்..!
=================

கள்ளம் இல்லா உள்ளமென்பார்
..........கொல்லக் கூடத் துணிந்திடுவார்!

கொள்ளை ஒன்றே குறிக்கோளாம்
..........கொண்ட மட்டும் அடித்திடுவார்!

அள்ள மட்டும் தெரிந்துகொண்டார்
..........அண்டா கொண்டு சுருட்டிடுவார்!

உள்ளம் அறிந்த நடிப்பினாலே
..........ஊரே நம்பும் உத்தமராம்.!

=========================
மா = மா = காய்
=========================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (28-Jun-18, 4:36 pm)
Tanglish : uthamar
பார்வை : 117

மேலே