மஞ்சப்பை
மஞ்சப்பை...
மஞ்சப்பையின் மறவாத நினைவுகள்
ஜவுளிக்கடையில கூப்பிட்டு கொடுப்பாக
விசேஷ வீடுகள்ல சீர் வச்சு தருவாக
வங்கிக்கு போறவன் கக்கத்துல கண்டிப்பா இருக்கும்
சந்தைக்கு போற விவசாயிக்கு சகலமுமா மஞ்சப்பை இருக்கும்
பட்டணம் போற கிராமத்தானுக்கு வழித்துணை மஞ்சப்பைதேன்
பத்திரிக்கை விநியோகம் மஞ்சப்பையில இருந்தே தொடங்கும்
பள்ளிக்கூட தோழனா மஞ்சப்பை பலரு தோளுல தொங்கிக்கிட்டு போகும்
நிறைய வீடுகள்ல மருந்து மாத்திரை பெட்டகம் மஞ்சப்பை
ஆத்தா சில்லறைய முடிஞ்சு வைக்கிறது மஞ்சப்பைலதான்
பால் வியாபாரம் பண்ற அண்ணனுக்கு கஜானா மஞ்சப்பை தான்
கீரைக்கார கிழவி இடுப்புல அசைஞ்சுக்கிட்டு இருக்குற கல்லாப்பெட்டி மஞ்சப்பைதேன்
கிராமத்தான் அடையாளமா மஞ்சப்பைய கொள்ள காலம் சொன்னாக
எங்கூட்டு ஆச்சி எல்லா சிட்டயவும் சேமிச்சு வைக்கிறது மஞ்சப்பைலதேன்
ரேசன் கடை வரிசையில மஞ்சப்பை நிச்சயம் இருக்கும்
ஜவுளிக்கடை சண்டையில மஞ்சப்பை தரலென்கிறது காரணமா இருக்கும் ஒருகாலத்துல...