பிச்சைக்காரனுடன் ஓர் உரையாடல்

தெருஓரத்தில் ஒரு பிச்சைக்காரன்
நலமா என்று விசாரித்தேன்
நல்கினால் நலம் என்றான்
பாக்கெட்டைத் துழாவினேன்
நிக்கல் அகப்படவில்லை
கரன்சிதான் இருக்கிறது என்றேன்
INR கரன்சி ஏற்றுக்கொள்ளப்படும் என்றான்
கரன்சி பெரிசு என்றேன்
சில்லறை மீதி தரப்படும் என்றான்
புதிதாய் வந்திருக்கும் வண்ணக் கரன்சி
நல்கினேன்
சில்லறையை எண்ணியவன்
எத்தனை மைனஸ் செய்ய வேண்டும் என்று கேட்டான்
KEEP THE CHANGE என்று நகர்ந்தேன்
கரன்சி போல் உங்கள் மனசும் பெரிசு என்று வாழ்த்தினான்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-18, 3:53 pm)
பார்வை : 107

மேலே