அன்னையின் அழுகை
அதிசயமாய் பிறந்த அழகிய பூவே
பாசத்தையெல்லாம் கொட்டி பாலுட்டி சீராட்டி வளர்த்தேன்
குழந்தை பருவத்தில் உன் குறும்புகளை ரசித்தேன்
குமரி ஆனதும் உனக்காக வன்னசேலைகள் அனைத்தும் வாங்கினேன்
அணிகலன்கள் அனைத்தையும் போட்டு அழகுபார்த்தேன்
எல்லையில்லா மகிழ்ச்சியால் இன்புற்றிருந்தேன்
மணமகனோடு நீ வாழும் வாழ்க்கையை இப்பொழுதே நினைத்து கனவுகள் கண்டேன்
தீடீரென தீராத நோயால் படுத்ததென்ன
என் மகளை குணமாக்குமாறு இறைவனிடம் கண்ணீர்விட்டேன்
இரக்கமில்லா இறைவன் ஏனோ என் மகளை அழைத்துக்கொண்டான்
அன்பு மகளே நீ மரணித்திருந்தாலும்
என்னுயிரையும் உன்னுடன் கொண்டுபோனாயே
நான் உயிர்றற்ற பிணமாய் உன்னையே நினைத்து வாழ்கிறேன்
கன்னிமலராய் நீ கடவுளிடம் சென்றுவிட்டதால்
நானும் ஒவ்வொரு நாளையும் உன்னிடம் வரும் நாளாக எண்ணி வாழ்கிறேன்!!!