அன்னை -

மார்வடி பாலூட்டி
பால்மதி சோறூட்டி
பிள்ளைத்தமிழ் தாலாட்டி -அன்பின்
பிறவி கொண்ட சீமாட்டி
ஓர் கொடி அறுத் தென்னை -உலகில்
உயிர்வடி வாக்கினனென்தாய்
நான் பெற்ற வரமென்பேன்.....
நோய்நொடியாயினும் -நெஞ்சே
தாய்மடி போதுமே! -நெஞ்சே
யார்மடி சேரினும் -நெஞ்சே
துயில் கொள்ளக் கூடிடும் -நெஞ்சே
தாய் மடிதன்னில் தான்
உயிர் கொள்ளக் கூடிடும்....
--நெஞ்சே, நெஞ்சே....
-- கல்லறைச்செல்வன்